முதல் பரிசு பெற்ற கவிதை
மாமதுரை கவிஞர்
பேரவை சொல்லில் உயர்வு
தமிழ்ச்சொல்லே – அதில் சொருகலாமா பிறச்சொல்லை
என்ற தலைப்பில்
மாநில அளவில்
நடத்திய கவிதைப் போட்டியில் பாவலர்
கருமலைத்தமிழாழன் அவர்களின்
கவிதை முதற் பரிசு பெற்றது. 06 – 12 – 2015 அன்று மதுரையில் நடந்த விழாவில் மன்றத்
தலைவர் கவிஞர் வீரபாண்டித் தென்னவன் அவர்களும்
மன்றச் செயலாளர் குறுங்கவிதை
மன்னன் கவிஞர் இரவி
அவர்களும் கவிபாரதி விருதளித்துப் பாராட்டிச்
சிறப்பு செய்தனர்.
சொல்லில் உயர்வு
தமிழ்ச்சொல்லே – அதில்
---சொருகலாமா பிறச்சொல்லை
பாவலர் கருமலைத்தமிழாழன்
காலையிலே எழுந்தவுடன்
பல்து லக்கக்
---கனிவாகப் பிரஷ்பண்ணி ; தண்ணீ
ராலே
கோலமுகம் கழுவபேஷ்
வாஷ் பண்ணி
---கொண்டதேநீர் டீபண்ணி
அருந்து கின்றோம் !
வேலைக்குச் செலும்முன்னே முகம்ம
ழிக்க
---ஷேவ்பண்ணி டிரஸ்பண்ணி டிபனைப்
பண்ணி
ஓலையிலே சங்கத்தில்
ஓங்கி ருந்த
---ஒண்டமிழைப் பண்ணிமொழி
செய்தோம் இன்று !
வாருங்கள் எனஅன்பாய்
அழைப்ப தற்கு
---வம்மின்னாம் தமிழிருக்கக் கம்மின்
என்போம்
சேருகின்ற நட்பாலே
நண்ப னானால்
--செப்புகின்றோம் தமிழ்விடுத்துப் பிரண்டாம்
என்றே !
பாருக்குள் மூத்ததாகத்
தனித்தி யங்கிப்
---பலமொழிகள் பெற்றெடுத்த தாயோ
இன்று
பேருக்குத் தமிழரென்றே இருப்ப
தாலே
---பெருமையுடன் இருந்ததமிழ் தாழ்ந்த
திங்கே !
மறைமலையாம் அடிகளொடு
பாவா ணர்தாம்
---மணிப்ப்ரவாள கலப்பகற்றித் தந்த
போல
கறைநீக்கத் தமிங்கிலராம் வேடம்
விட்டுக்
---காத்திடுவோம் தன்மானத்
தமிழ ராக !

வாழ்த்துகள்
ReplyDeleteதொடர்ந்தும் வெற்றிகள் பெற வாழ்த்துகள்!
உலகெங்கும் நற்றமிழைப் பேணுவோம்!
நன்றி ஐயா
Delete