இரத்தல்
பாவலர் கருமலைத்தமிழாழன்
இரப்பதொன்றும் இழிவில்லை
பக்தி யோடே
இரந்திடுவோம் இறைவனிடம்
அருளுக் காக
வரமாக நல்லமனம்
வேண்டி நின்று
வாய்மையொடு பேசிடவே
இரப்போம் நாமே
அரம்போன்ற கூர்மையான
அறிவி னோடும்
அன்புசெயும் மனிதநேயம்
இரப்போம் நாமே
சிரம்வெட்டும் பகையின்றிக் கைகள்
கோர்த்துச்
சிரித்துவாழும் ஒற்றுமையைப் பெறுவோம்
வேண்டி !
கரம்நீட்டிக் கேட்பதுவோ
இழிவு ! கேட்டும்
கரம்பார்த்தே இல்லையெனல் அதனினும்
இழிவு
கரவுநெஞ்சில் இந்திரன்தான் கேட்ட
போதும்
கர்ணன்தான் கவசத்தைத்
தந்த போல
இரக்கமுடன் மயிலுக்கும் கொடிமுல்
லைக்கும்
ஈந்தபேகன் பாரியைப்போல் கேட்கு
முன்பே
தரவேண்டும் இடுப்புதுணி நழுவும்
போது
தானாக உதவுகின்ற
கைகள் போன்றே !
தாலிகட்டக் கேட்கின்ற வரதட்
சணையும்
தன்கடமை செயக்கேட்கும் இலஞ்சப்
பணமும்
வேலிகளே பயிர்களினை மேய்தல்
போல
வெளிப்படையாய்க் கேட்கின்ற
பிச்சை தானே !
காலிரண்டில் நாம்நின்றே
கையி ரண்டைக்
கடுமையாக உழைப்பதற்கே நீட்ட
லன்றி
வாலினையே ஆட்டிநாய்தான் குழைதல்
போன்றே
வாங்குதற்கு நீட்டாமல்
கொடுத்து யர்வோம் !


சிறந்த பாவரிகள்
ReplyDeleteசிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்